கொங்கோவில் படகு விபத்து – 50 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர். அப்போது துரதிஷ்டவசமாக படகும் ஆற்றில் கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

படகு தீப்பிடித்த விபத்துக்கு பெண் ஒருவர் சமையல் செய்ததே காரணம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *