காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில், காஸாவில் உணவின்றி தவிக்கும் பலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் ஊயிரிழந்துள்ளனர்.
காஸாவுக்குச் செல்லும் உணவுகள் உட்பட பிற பொருட்கள் அனைத்தும் இஸ்ரேல் இராணுவத்தை மீறி மக்களுக்குச் சென்றடைவது பெருமளவில் தடைபட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி பலஸ்தீன அதிகாரிகள் கூறுகையில், போதிய உணவின்றி தவிப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் 66 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர்.
போர் குற்றச் செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதையே இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாகவும், மக்களை உணவுக்கக தவிக்கச் செய்து அதனால் பலஸ்தீனத்தில் இனப்படுகொலை நிகழ்த்த இஸ்ரேல் காய் நகர்த்துவதாகவும் பலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஸாவில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக, அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்படிக்கையாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிபடச் சொல்லியிருப்பதால் விரைவில் அப்பகுதியில் அமைதி நிலைநாட்டப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.