காத்தான்குடி கடலில் சடலம் மீட்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி சடலத்தை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *