கட்டார் உள்துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

 மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், கட்டார் உள்துறை அமைச்சு நாட்டில் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டு, குடியிருப்பாளர்களிடம் அமைதியாக அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றப்படும் மக்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிலருக்கு அருகிலுள்ள மெட்ரோ நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது உடனடி அச்சுறுத்தல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதுவேளை, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், அமெரிக்க குடிமக்கள் மத்திய கிழக்கிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வணிக விமானங்கள் கிடைக்காத சூழலில், ஓமான் அல்லது சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *