நாட்டில் உள்ள பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன.
இன்று நள்ளிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வாகன வரிசைகளில் நின்று கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது என்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.