இந்தோனேசியாவில் வலுவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா பகுதியில் இன்று (12)  வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிச்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *