அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் வெய்னி பகுதியில் கிராஸ் பாயிண்ட் என்ற தேவாலயத்தில் நேற்று (22) மர்ம நபரொருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தேவாலயத்தில் கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரொருவர் திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில், பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தேவாலயத்திற்கு வந்த நபரொருவர் லொரியை கொண்டு அந்த நபர் மீது மோதியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்த பாதுகாவலர் மர்ம நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இச் சம்பவத்தில் மர்ம நபர் உயிரிழச்துள்ளார்.
குறித்த சம்பவம் பற்றி அறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்நபரின் உடலை மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.