பிலிப்பைன்ஸின் தெற்கு தீவுகளில் இன்று (7) 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், மிண்டானாவோ தீவில் உள்ள சாண்டியாகோ நகரிலிருந்து கிழக்கே சுமார் 27 கிலோமீற்றர் தொலைவில் 58.5 கிலோமீற்றர் (36 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. இருப்பினும், அதிகாரிகள் இன்னும் சுனாமி எச்சரிக்கையை வெளியிடவில்லை.
