வடக்கு சூடானில் உள்ள நைல் நதியில் பயணிகள் படகு மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 30 பயணிகளை ஏற்றிச்சென்ற படகானது, தைபா அல் – கவாட் மற்றும் டெய்ம் அல் கராய் ஆகிய கிராமங்களுக்கிடையிலேயே படகு பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புக் குழுவினரின் நடவடிக்கையில் சுமார் 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
எஞ்சியவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
