இன்று(25)பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை எதிர்வுகூறியுள்ளது.
வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதற்கிடையில், இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
