திருகோணமலையில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்

திருகோணமலை – அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து, இன்று(05.01.2026) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை 6ம் கட்டைப் பகுதியில் நடமாடும் பஞ்சர் ஒட்டும் சேவை வழங்கி வருபவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முச்சக்கர வண்டி விபத்து தொடர்பில்  திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முச்சக்கரவண்டி  வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை தான் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *