கனடாவின் புதிய குடியுரிமை சட்டமூலம்

கனடா தனது குடியுரிமை சட்டமூலங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, சி-3 எனும் புதிய குடியுரிமை சட்டமூலத்தை 2026ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது.

கனடாவின் குடியுரிமை சட்ட, திருத்தச்சட்ட மூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டமூலம் கனடாவில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் கனேடிய குடிமகனுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையின் கனடா குடியுரிமையைத் தடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 2024 மே மாதம் சி-3 எனும் புதிய திருத்தச் சட்டமூலத்தைக் கனடா அரசு அறிமுகப்படுத்தியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *