இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று கிராமங்களில் நேற்று (13) மாலை ஏற்பட்ட மண்சரிவில் 12 வீடுகள் இடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்சரிவால் வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் மாயமாகியுள்ளனர்.
மாயமானவர்களை தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தேசிய பேரிடர் முகாமைத்துவ செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.
