வரவு செலவு திட்டம் -2025 : விசேட முன்மொழிவுகள்

வரவு செலவு திட்டம் 2025 :- அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதம் முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டம் 2025 :- வறுமையை போக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள்.

வரவு செலவு திட்டம் 2025 :- புதிய தேசிய தீர்வை வரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டம்.

வரவு செலவு திட்டம் 2025 :- புதிய சுங்க சட்டத்தை முன்வைக்க நடவடிக்கை.

வரவு செலவு திட்டம் 2025 :- வருமானத்தை அடிப்படையாக கொண்டு அரச காணிகள் முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :- அரச – தனியார் கூட்டாண்மைக்கு புதிய சட்டம்.

வரவு செலவு திட்டம் 2025 :- தேசிய தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒடுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :- கொழும்பு துறைமுகத்தின் வடக்கு – மேற்கு முனைய அபிவிருத்திகளுக்காக ஒரு மாதத்துக்குள் யோசைனைகள் கோரப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :- பல்நோக்கு பொருள் விநியோக மத்திய நிலையமாக வெயாங்கொடையில் உள்ளக கொள்கலன் முனையம் நிர்மானிக்கப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :- துறைமுக அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  கொழும்பு துறைமுகம் – பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தில் உயர்தர ஸ்கேன் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒருக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  இலத்திரனியல் அடையாள அட்டை விரைவில்.

வரவு செலவு திட்டம் 2025 :-  விரைவில் இலத்திரனியல் பொருளாதார அதிகாரசபை உருவாக்கப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :-  கட்டங்கட்டமாக நாணயத்தாள் பாவனையை குறைக்க திட்டம்..

வரவு செலவு திட்டம் 2025 :-  தொடர்பாடல் தொழில் நுட்பத்தினூடான வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை 5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :-  டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  சுற்றுலாதுறை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  சுற்றுலாதுறை சார் இடங்களுக்கு புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :-  ஜப்பான் நிதியுதவியுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :-  அரச அபிவிருத்தி வங்கி உருவாக்கப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :-  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய காப்புறுதி இரண்டரை இலட்சம் ரூபாவால் குறைப்பு.

வரவு செலவு திட்டம் 2025 :-  எதிர்வரும் மார்ச் மாதம் முதல் சகல அதிசொகுசு வாகனங்களும் குத்தகைக்கு

வரவு செலவு திட்டம் 2025 :-  பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனம் இறக்குமதி செய்வதல் மற்றும் வாகன இறக்குமதிக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு நீதி ஒதுக்கீடு இல்லை.

வரவு செலவு திட்டம் 2025 :-  திரிபோசா வேலைத்திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  மகளிர் , சிறுவர் துஷ்பிரயோகம், மகளிர் திறன் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  மகளிர் அபிவிருத்திக்கான கிளைகளை மேம்படுத்த 720 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்காக மனிதளவளம், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.

வரவு செலவு திட்டம் 2025 :-  சுகாதார சேவைக்காக 604 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.

வரவு செலவு திட்டம் 2025 :-  லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சர்வதேச தரம் கொண்ட சிகிச்சை நிலையமொன்றை அமைக்க 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  பாடசாலை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபா வரையில் நிதி ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  பல்கலைக்கழக கட்டமைப்பு அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  பாலர் பாடசாலை மாணவர்களுக்காக காலை உணவுக்கான வேலைத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 60 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிப்பு – 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  பாடசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து புதிய நிலையை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  புலமைபரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மாணவர் உதவி தொகை 750 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக அதிகரிப்பு- 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  விளையாட்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த போசணை கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிப்பு.

வரவு செலவு திட்டம் 2025 :-  தொழில் பயிற்சி கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 4000 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிப்பு – 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபொல உதவி தொகையை 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிப்பு – பல்கலை. மாணவர்களின் மாணவர் உதவி தொகை 4000 ரூபாவிலிருந்து 6500 ரூபாவாக அதிகரிப்பு. (4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு)

வரவு செலவு திட்டம் 2025 :-  உயர்தரப் பரீட்சையின் அதி சித்தியை பெறும் மாணவர்கள் வெளிநாட்டு படிப்பு மற்றும் வினைத்திறன் விருத்தி வேலைத்திட்டத்துக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  மேல், வடமத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களில் விசேட விளையாட்டு துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு- ஏனைய பகுதிகளிலுள்ள நூலகங்களுக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  திருத்தப்பட்ட புதிய மின்சார சட்டம் விரைவில்.

வரவு செலவு திட்டம் 2025 :-  திருகோணமலையிலுள்ள 66 எண்ணெய் தாங்கிகளை சர்வதேச நிறுனங்களுடன் ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்ய திட்டம்.

வரவு செலவு திட்டம் 2025 :-  விவசாயிகளுக்கான உர மானியத்துக்கான ஒதுக்கீடு 35000 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு .

வரவு செலவு திட்டம் 2025 :-  2024 / 2025 ஆம் ஆண்டு பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  சோயா, கௌப்பி, பாசிப்பயறு, உளுந்து, மிளகாய், உருழைக்கிழங்கு போன்ற தானிய விளைச்சல்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  பாவனையின்றி இருக்கும் காணிகளின் மீள் அபிவிருத்திக்கான ஆரம்பகட்டச் செயற்பாடுகளுக்காக 250 மில்லியன் ருபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  இராஜாங்கனை, கல்லோயா, மின்னேரியா, உருவெல நீர்தேக்கங்களின் மீள் அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  தென்னை பயிர்செய்கை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  கறுவா உள்ளிட்ட ஏனைய ஏற்றுமதி பயிர்களுக்கான சந்தை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வரவு செலவு திட்டம் 2025 :-  அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான ஒதுக்கீடு 232.5 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.

வரவு செலவு திட்டம் 2025 :-  சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 7500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *