வடக்கு மாகாண கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், வடக்கு மாகாணத்தின் உயர்தர பரீட்சை முடிவுகள் பின்தங்கியிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றும்போது, சில உயர் கல்வி அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக அவதானிக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வியின் பின்னடைவுக்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என பிரதமர் விமர்சித்தார்.
இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர், கல்வி அமைச்சு செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.