வறட்சியான காலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு வன பாதுகாப்பு திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மலைநாட்டின் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கும் என வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு இதுவரை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 11 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தீ வைப்பதற்குக் காரணமான நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.