நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் 5 வரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களால் நடத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸார் 68 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட T-56 ரக 6 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இந்தக் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட எட்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு வேன் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.