மாவனெல்லா, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
