தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1447 புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (18) புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழுத் தலைவர் மெளலவி எம்.பி.எம். ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் நடைபெறும்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மற்றும் ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *