சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சென்று பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வார காலம் தங்கி ஆய்வு பணி மேற்கொள்வதற்காக திட்டமிட்டு சென்று, 9 மாதங்களாகசர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து ராக்கெட் ஒன்றை அனுப்பி உள்ளது.
இதற்காக, டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ரக ராக்கெட் ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது.
இந்த ராக்கெட் இன்றிரவு 11.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்ததும், வருகிற 19ம் திகதி வில்மோர் மற்றும் வில்லயம்ஸ் இருவரும் அந்த விண்கலத்தில் புறப்பட்டு பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
அவர்களுடன் நாசா விஞ்ஞானி நிக் ஹேக் மற்றும் ரஷிய அலெக்சாண்டர் விஞ்ஞானி கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்புவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.