கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஒன்றாரியோ மற்றும் கியுபெக் ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தபால் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்புயல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தபால் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால்களை சேகரிப்பது மற்றும் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் காலநிலை காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில பகுதிகளில் வழமை போன்று தபால் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.