நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த ஆறு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் , திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஓமானின் மஸ்கட்டிலிருந்து வந்த சலாம்எயார் விமானம் OV-437, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டுபாயிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226, மஸ்கட்டிலிருந்து வந்த UL 218, தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து வந்த எயார்ஏசியா விமானம் AK 47 ஆகியவை இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
மேலும், தம்மாமில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 254, புது டெல்லியில் இருந்து வந்த எயார் இந்தியா விமானம் AI 277 ஆகியவை கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
