இஸ்ரேலில் உள்ள கிரியாத் மலாக்கி பகுதிக்கு அருகே வேளாண் துறையில் பணிபுரியும் 20 இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கிருந்த இலங்கையர்கள் கண்ணாடிகளை உடைத்து வெளியே சென்றுள்ளனர். அவ்விபத்திர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த இளைஞருக்கும் பெரிய காயங்கள் எதுவும் இல்லையெனவும் குறித்த விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து தீக்கிரையாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.