இலங்கை தனியார் – அரச பேருந்து சேவைகளின் நேரங்களில் இன்றுமுதல் மாற்றம்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒருங்கிணைந்த கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

கொழும்பு – சிலாபம், கொழும்பு – புத்தளம், கொழும்பு – ஆனமடுவ, கொழும்பு – எலுவன்குளம், கொழும்பு – கல்பிட்டி, நீர்கொழும்பு – கல்பிட்டி, கொழும்பு – மன்னார், கொழும்பு – தலைமன்னார், கொழும்பு – குளியப்பிட்டி, கொழும்பு – நிக்கவெரட்டிய, கொழும்பு – குளியப்பிட்டி, கொழும்பு – அனுராதபுரம், கொழும்பு – வவுனியா, கொழும்பு – கிளிநொச்சி, கொழும்பு – யாழ்ப்பாணம், கொழும்பு – காங்கேசன்துறை, கொழும்பு – காரைநகர், கொழும்பு – துனுக்காய் ஆகிய வழித்தடங்களை இந்த ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு நேர அட்டவணை முறையின் கீழ் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று (25) நள்ளிரவு முதல் கொழும்பு, பஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து முற்றத்தில் இந்த வழித்தடங்கள் நேர மாற்றத்தின் பிரகாரம் தொடங்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைகுழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.

நான்கரை மணி நேர பயணத்திற்குப் பிறகு, பேருந்து ஓட்டுநருக்கு ஓய்வு தேவைப்படுகின்றது. ஆகவே, அதற்கேற்றாற்போல் நேர முகாமைத்துவம் சீரமைத்துக் கொடுக்கப்படும்.

மேலும், பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவகத்தில் சுகாதாரமான உணவு வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்பு இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *