பாகிஸ்தானில் ரயிலுடன் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 400 பேரில் 155 பேரை பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. பணயக் கைதிகளைப் பிடித்த பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பணயக் கைதிகளாக உள்ள 200க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஆனால் பணயக் கைதிகளைச் சுற்றி தற்கொலைப் படையினர் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.