துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.
சபைத் தலைவருக்குரிய தன்னுடைய கதிரையில் அமர்ந்திருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை தலைவரை மாத்தறை பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், படுகாயமடைந்த தலைவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திச் சென்ற துப்பாக்கிதாரிகள், பிரதேச சபைத் தலைவரிடம் ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்குவதற்காக சபைக்குள் நுழைந்ததாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
