மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.  […]

மூதூரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் […]

அட்டாளைச்சேனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.  நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி […]

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு

கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் […]

கிழக்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள் – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

அரசாங்கத்தினுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சபையில் சமர்ப்பித்தார். அவருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்கள் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்பார்த்த […]

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை

கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு […]

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்-மட்டு. பாலமீன்மடு கடற்கரையில் சிரமதானம்

‘சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் நடலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அம்சமாக ‘சுத்தமான கடற்கரை – […]

மட்டு. மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் முதலாவது நிருவாக சபைக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் இன்று (15) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் […]

கல்வித் துறையில் வடக்கு கிழக்கில் பதவி வெற்றிடங்கள்

இலங்கையின் மேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு, தற்போது, வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள்  இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் […]

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய குரு சிவஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டில் முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றதை […]