பனஹடுவ ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு – மற்றொருவர் மாயம்

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

30 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

குறித்த இருவரும் பனஹடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்களும் நீரில் மூழ்குவதைக் கண்ட நபர் ஒருவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

பின்னர், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய உயிர் காக்கும் பிரிவு மற்றும் இராணுவத்தின் நீச்சல் வீரர்கள் வந்து இருவரையும் தேடும் பணியை ஆரம்பித்த நிலையில், ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

காணாமல் போன மற்றொருவரின் உடலைக் கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *