குருவிட்ட, தெவிபஹல பகுதியில் நேற்று (02) மாலை நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் 26 வயது பெண் ஒருவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத ஒரு குழு பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் குருவிட்ட, தெவிபஹல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைதுசெய்ய குருவிட்ட பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.