செம்மணி மனித புதைகுழிக்கு எதிரான நீதி கோரல் போராட்டத்தின் போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று நாடாளுமன்றில் எதிர்தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் இந்த விடயம் நகைச்சுவையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது “முன்னதாக இந்த உயரிய சபையில் வைத்து தன்னை தமிழ் மக்கள் விரட்டியடிப்பார்கள் என கூறிய அமைச்சர், அதே தமிழ் மக்களால் இன்று விரட்டியடிக்ப்பட்டுள்ளார் என்பதை நினைவில்கொள்ளலேண்டும்.” என அர்ச்சுனா கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறு செம்மணியில் விரட்டியடிக்கப்ட்ட அமைச்சரின் பாதணிகள் எனது காரில் உள்ளது எனவும், அதனை வந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.