யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
அராலி – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று காலை தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியதன் காரணமாக மனவிரக்தியடைந்த குறித்த நபர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.