ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 18ஆம் திகதி பெரிய வெள்ளி என்பதால், குறிப்பிட்ட வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் காணப்படுகிறது. எனவே, 15ஆம் திகதி குறித்து இன்னும் தீர்மானமொன்றுக்கு வரவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஏப்ரல் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வௌியிடவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.