இலங்கையின் 77ஆவது சுதந்திரநாள் ஆன இன்று (04) தமிழர் தாயகத்தின் கரிநாள் என தெரிவித்தும் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரதும் பொது அமைப்புகளினதும் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன், வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கலந்து கலந்து கொண்டனர் .