சொல்லேருழுவர் மரியாம்பிள்ளை கதிர்காமர் அந்தோனிப்பிள்ளை அந்தனிசில் இவரே ஒரு தீப்பொறி பத்திரைகையின் ஆரம்பகர்த்தா. 1961இல் யாழ்பாணத்தில் தீப்பொறி பத்திரிகை வெளியிடப்பட்டது.
இப் பத்திரிகை இலங்கையின் பல பகுதிகளில் பரவலான விற்பனையை கொண்டிருந்தது. 1965ம் ஆண்டு தீப்பொறி இதழ்களில் அந்தனிசில் எழுதிய இரண்டு கட்டுரைகள் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தீப்பொறி பத்திரிகைக்கு தடைவிதிக்கப்பட்டது.
1972ம் ஆண்டு ஒருதீப்பொறி என்ற பெயரில் மீண்டும் பத்திரிகையை ஆரம்பித்தார் ம.க.அ. அந்தனிசில்தொடர்ச்சியாக வார இதலாக வெளிவந்த ஒருதீப்பொறி பத்திரிகை 1983ம் ஆண்டு ஜுலை 23இல் வெடித்த இன கலவரம் காரணமாக வெளியுஸ்ரீர்களில் இருந்து வரவேண்டிய விற்பனைப் பணம் வராமல் போன காரணத்தினால்
ஒருதீப்பொறி பத்திரிகையின் வெளியீட்டை நிறுத்திக்கொண்டார் ம.க.அ. அந்தனிசில்
மீண்டும் புதுபொழிவுடன் தீப்பொறி ஆசிரியர் அந்தனிசிலின் பேரப்பிள்ளைகளினால் மட்டக்களப்பு மண்ணில் இருந்து இனையத்தளம் மற்றும் முகநூல், யுடியுப் போன்ற சமூக ஊடகங்களின் ஊடாக இன்று ஆரம்பமானது ஒருதீப்பொறி