நாட்டின் 77 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில், அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.