போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு குழுவினரை பணிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பஹலகம பொலிஸ் கல்லூரியில் பயிற்சி பெறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
