இந்த ஆண்டின் முதல் ஐந்து நாட்களுக்குள் 793 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மாத்திரம் 51,438 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். உத்யோகப்பூர்வ தகவல்களின்படி, கடந்த ஆண்டு 26 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
