220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோத விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியா மது வரித் திணைக்கள அதிகாரிகள் (03) ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

நுவரெலியா பியதிஸ்ஸ புரத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரையும், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள இந்திய நாட்டவருக்குச் சொந்தமான காய்கறி கடையில் சட்டவிரோதமாக விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 220 வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சிகரெட்டுகளையும் கைப்பற்றி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் தலா ரூ. 20,000 அபராதம் விதித்து நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார். 

அபராதம் செலுத்திய பின்னர் இருவரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *