11 மாவட்டங்களில் அதியுச்ச மண்சரிவு அபாயம்: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நீடித்து வரும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக, 11 மாவட்டங்களுக்கு அதிகபட்ச மண்சரிவு அபாய எச்சரிக்கையான மூன்றாம் நிலை (சிவப்பு) எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் […]

இதுவரை 179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 தனிநபர்கள் பாதிப்பு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில்179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 716 […]

வானிலை ஆய்வு மைய இணையத்தளம் செயலிழப்பு

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தற்காலிகமாக செயலிழந்துள்ளது. இதற்கிடையில், சமீபத்திய வானிலை தகவல்களை தெரிந்து கொள்வதற்காக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கூடிய விரைவில் முழு சேவையையும் […]

நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்..

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.  டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் மற்றும் […]

இரணைமடுக் குளத்தின் வெள்ளப் பாதுகாப்பு சுவர் உடைந்தது

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது.  இதனால் குறித்த பகுதியில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நீர்விநியோகம் முற்றிலும் தடைபடலாம்

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால், […]

மற்றுமொரு பாரிய நிலச்சரிவு.. 20 குழந்தைகள் உட்பட 120 பேர் மாயம் – 800 குடும்பங்கள் பாதிப்பு

நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர – அலவதுகொட வீதியில் உள்ள ரம்புக் எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

இலங்கையை நிலைகுலைய வைத்துள்ள தித்வா சூறாவளி! 85 பேர் மரணம்

சீரற்ற காலநிலை காரணமாக, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இதுவரை பதிவான மொத்த பலி எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட செயலாளர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த […]

வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் செயலிழந்துள்ள தொலைபேசி அழைப்பு

இலங்கையில் வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொலைபேசி அழைப்புக்கள் செயலிழந்துள்ளன.  அதேவேளை, இணைய வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளன.  இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், […]

காணாமல் போன 5 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு

காலி, ரத்கம கடற்பரப்பில் காணாமல் போயிருந்த ஐந்து மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர், ரத்ன கமகே அவர்கள் இன்று (28) உறுதிப்படுத்தினார். நவம்பர் 26 ஆம் […]