கனடாவின் மக்கள் தொகை 41.5 மில்லியனாக உயர்வு

கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ஜனவரி 1 நிலவரப்படி 41,528,680 ஆக உயர்ந்துள்ளது என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் (அக்டோபர் 1, 2024 முதல் ஜனவரி […]

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இராஜினாமா!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

பிரதமர் – இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பு நேற்று (19) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளினதும் […]

மே 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.  […]

திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை கடல்சார் மையமாக மாற்றும் திட்டம்.

புதிய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின்படி, இலங்கைக்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக துறைமுக விவகார பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் […]

நாட்டில் வாய்ப் புற்றுநோயால் நாளாந்தம் மூவர் உயிரிழப்பு

வாய்ப் புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் மூன்று பேர் உயிரிழப்பதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 புதிய வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் […]

உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நிறைவடைகின்றன. இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை […]

பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் […]

பிரதான வீதியில் பியர் கொள்கலன் விபத்து

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மேலும், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இளம் பெண் கொலை – ஒருவர் கைது

வென்னப்புவ தெற்கு வைக்கால் பகுதியிலுள்ள வீடொன்றில் இளம் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (18) இரவு   இடம்பெற்றுள்ளது. காதல் உறவு காரணமாக ஏற்பட்ட குடும்பத் தகராறிலேயே  இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக […]