பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் போதைப்பொருட்கள் இன்று (02) அழிக்கப்படவுள்ளது.
இந்த போதைப்பொருட்கள் இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.
இந்த போதைப்பொருள் புத்தளம், வனாதவில்லு பகுதியில் நிறுவப்பட்ட எரியூட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட உள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
