கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிக்காத தோட்டா, விமான நிலைய ஊழியரால் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் இலங்கை விமானப்படை தரைப்படை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்து, பின்னர் அதை இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
கண்டெடுக்கப்பட்ட தோட்டாவை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், தோட்டாவை கண்டுபிடித்த விமான நிலைய ஊழியரிடமிருந்தும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தற்போது குறித்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக தடயவியல் ஆய்வாளரிடம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.