அஜித்தின் விடாமுயற்சி படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் உலகம் முழுக்க சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது.
மேலும் சென்னை விநியோக பகுதியின் வசூல் மட்டுமே 2.3 கோடி ரூபாய் வசூல் வந்திருந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாம் நாள் வசூல் விவரம் தற்போது வந்திருக்கிறது.
சென்னையில் இரண்டு நாட்களில் 3.2 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம் விடாமுயற்சி படம்.
மேலும் அடுத்து வார இறுதி விடுமுறை என்பதால் அடுத்த இரண்டு நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
இலங்கை வசூல்
மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம் இரண்டு நாட்களில் இலங்கையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா. அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விடாமுயற்சி படம் இரண்டு நாட்களில் இலங்கையில் ரூ. 2 கோடி க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 70 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.