வறட்சியான காலநிலையால் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

இந்த நாட்களில் நாட்டில் நிலவிவரும் மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு சம அளவில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

எனவே, வாகனங்களை கழுவுதல், தோட்ட நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுபோன்ற சூழ்நிலைகளில், நுகர்வோரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயர் நிலப் பகுதிகளில் உள்ள நீநுகர்வோருக்கு தண்ணீரை விநியோகிக்கும்போது குறைந்த அழுத்தம் ஏற்படக்கூடும் என்று தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது, 

மேலும் இந்த நேரத்தில் பாதுகாப்பான குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மேற்படி சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *