மூன்று மொழிகளிலும் பஸ் பெயர்ப் பலகைகள் – மேல் மாகாணத்தில் புதிய திட்டம்

அரச கரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு, இலங்கையின் பொது போக்குவரத்து துறையில் முக்கியமான மாற்றம் ஒன்று இன்று அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களிலும் பெயர்ப் பலகைகள் இப்போது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பதிக்கப்பட உள்ளன.

இந்த புதிய திட்டம் முதற்கட்டமாகமேல் மாகாணத்தில்ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாட்டு சேவைகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதையும், மொழி அடிப்படையில் எவருக்கும் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அரச மொழிகளையும், இணைப்புத் மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்துவதன் மூலம், சமூக ஒற்றுமையையும் இடையறாத தகவல் அணுகலையும் உறுதி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *