மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த மானியம் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும், நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்காக 150,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *