மினுவங்கொடை, பத்தடுகொட பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
கொட்டகம முதியான்சலாகே லஹிரு ரந்தீர் காஞ்சன என்ற 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியொருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
மோட்டர் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைதுசெய்ய மினுவங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.