நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தின் காரணமாக நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இன்று (22) காலை பழமைவாய்ந்த மரம் ஒன்றின் கிளை திடீரென முறிந்து விழுந்துள்ளது.
வீதியின் ஒரு பகுதியில் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் அக்கிளை முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த வீதியை பயன்படுத்துவோருக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் உடனடியாக மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
