மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (03) மனம்பிட்டிய மகாவலி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று மோதியுள்ளதாகவும், அதன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மனம்பிட்டிய வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சோமாவதி தேசிய பூங்காவிலிருந்து வெள்ளப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்த காட்டு யானை ஒன்றே ரயிலில் மோதியுள்ளது.
சுமார் 25 வயதுடைய ஆண் யானையே இவ்வாறு ரயிலில் மோதி படுகாயமடைந்துள்ளதாக என்று மனம்பிட்டி வனவிலங்கு திணைக்களத்தின் தள உதவியாளர் ஆர்.ஆர். சாந்தா தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மனம்பிட்டி வனவிலங்கு திணைக்களத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
ரயிலில் மோதிய பின்னர் காட்டு யானை சுமார் 20 மீற்றர் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டதால் ரயிலிலும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.