பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக வத்திக்கான் தகவல் வெளியிட்டுள்ளது.
நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
எனினும், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.